தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேம்பார்பட்டி
ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு
வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் கிராம சபை கூட்ட நிகழ்ச்சி வேம்பார்பட்டி ஊர் மந்தையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேம்பார்பட்டி ஊராட்சி செயலர் மார்ட்டின் கென்னடி தீர்மானங்களை வாசித்தார்.
இதில் பற்றாளர் கனகவள்ளி, கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், மகளிர் திட்ட வட்டார அலுவலர் போதும் பொண்ணு, நூலக அலுவலர் ஜெயமணி , கால்நடை மருத்துவ அலுவலர் முருகானந்தம், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஸ்வரி,
சுகாதார ஆய்வாளர் , வேளாண்மை துறை அலுவலர் , ரேஷன் கடை ஊழியர் , அங்கன்வாடி ஊழியர் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீர்மானங்களான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024 – 25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்து பேசப்பட்டது. பொது சுகாதாரம் குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,விவசாயத்துறை,கூட்டுறவுத்துறை, ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.