ஈரோடு ஜூலை 1 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்திட கிராம அளவிலான குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளி களை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது
வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டி தரும் திட்டத்தினை மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்தார் இதையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது
ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர காங்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் திட்டத்தின் நோக்கம் ஆகும்
இதில் முதல்கட்டமாக 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா 3.5 லட்சம் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் மேலும் திட்ட மதிப்பிற்கும் அதிகமான செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது
மேலும் அனைத்து வீடுகளும் குறைந்தது 360 சதுர அட்டியுடன் இருக்க வேண்டும் அதில் 300 சதுர அடி ஆர் சி சி கூரையும் 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டும் பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ற கட்டப்பட வேண்டும் கூரை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.