நாகர்கோவில் – செப்- 11
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய்வசந்த் எம்.பி அவர்கள் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திறந்த வாகனத்தில் பொதுமக்களை சந்தித்து பல கட்டங்களாக நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். அதேபோல இன்று கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மார்த்தாண்டத்தை அடுத்த பயணத்தில் இன்று நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர், . மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இன்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் உண்ணாமலை கடை, மார்த்தாண்டம், இரவிபுதூர்கடை, காஞ்சிரகோடு, விரிகோடு, இடைவிளாகம் உட்பட பல பகுதிகளுக்கு சென்றனர்.இந்த நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் காலை 10:00 மணிக்கு தொடங்கி இரவு 7:00 மணியளவில் நிறைவு செய்தார்.
நன்றி அறிவிப்பு சுற்றுபயண நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால்சிங், அகில இந்திய பொது குழு உறுப்பினர்கள் ரத்தினகுமார், அரோக்கியராஜன், மாநில பொதுச் செயலாளர் அருள்ராஜ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, வட்டார தலைவர்கள் என். ஏ. குமார், ரெகுபதி, மாநில பேச்சாளர் சுஜின்குமார், எபனேசர் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.