நாகர்கோவில் ஏப் 22
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் போப் ஆண்டவர் மறைவுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையான போப் பிரான்சிஸ் நேற்று மரணம் அடைந்ததாக வாடிகன் அறிவித்திருந்தது.
கத்தோலிக்க சபையின் திருத்தந்தை “POPE” பிரான்சிஸ் மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அவரது மறைவின் மூலம் ஒரு சிறந்த ஆன்மீக தலைவரை இழந்து விட்டோம். ஏழைகளின் மீது அவர் கொண்ட பரிவும், சமுதாயத்தால் ஒதுக்கபட்டவர்கள் மீது அவர் பொழிந்த அன்பும் அவரது சிறந்த பண்புகள். அவரை இழந்து வருந்தும் உலகமெங்கும் உள்ள சபை மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.