கன்னியாகுமரி ஜூன் 7
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வெற்றி பெற்றுள்ளதையடுத்து கொட்டாரம் சந்திப்பில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வின்சென்ட், மாவட்ட பொது செயலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், கொட்டாரம் செயல் தலைவர் ஜார்ஜ், பொருளாளர் ஜார்வின் கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகிகள் அருள்முருகன், பிரபு, ஆனந்த், நெப்போலியன், பாலகிருஷ்ணன், சனோஜ், கோவளம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் இளங்கோ, செயல் தலைவர் லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.