நாகர்கோவில் ஜூலை 13
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாவது:-
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அநாகரீக முறையில் பேசி வரும் அண்ணாமலை மற்றும் அவர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.
செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். எனவே இவரின் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்ந்து அநாகரீகமான முறையில் பேசி வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியினரை வன்மையாக கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.