நாகர்கோவில் செப் 12
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளர்களை தோற்கடித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நேற்று நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியானது பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. இந்த நன்றியறிவிப்பு பயணம் வெட்டுர்ணிமடம், வாத்தியார்விளை .அருகுவிளை, வடசேரி, ஒழுகினசேரி, வடிவிஸ்வரம், கோட்டார், செட்டிகுளம், வேப்பமூடு, கிறிஸ்துநகர் வழியாக நடுகாட்டு இசக்கியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.