நாகர்கோவில் – அக்- 13,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெரும் பணிகளுக்கு பாராளுமன்ற நிதி ஒதுக்கி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நாளை அடிக்கல் நாட்டு விழாவிற்க்கு வருகை தருகிறார். இது குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர், நாகர்கோவில் மாநகரம் 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜெ. எஸ். நவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு சென்ன வண்ணான் விளையில் காலை 9 மணிக்கு ரூ. 13 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் , பட்டகசாலியன் விளையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை குடிநீர் கிணறு மற்றும் மின் மோட்டார் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டுகிறார்,
வார்டு எண் 33 க்கு உட்பட்ட குருசடி ஊருக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். வார்டு எண் 32 வடக்கு கோணத்தில் ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கி காலை 9:45 மணிக்கு ஆற்றுப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்
மற்றும் 37-வது வார்டு வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டித்தை ( காலை – 10) மணிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைக்கிறார். என அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.