நாகர்கோவில் – ஜூலை – 26,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இ.எஸ். ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நலன் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 200 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுவதற்கு 2013 ஆம் ஆண்டு அன்றைய தொழிலாளர் நல துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணிகள் ஆரம்பிக்க படாமல் உள்ளது.
இந்நிலையில் அமைச்சரை சந்தித்த விஜய் வசந்த் இந்த பணிகளை உடனே தொடங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிட்சை அளிக்க கூடிய ஒரு இ.எஸ். ஐ மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
தொழிலாளர்களுக்கான ஒரு பல் நோக்கு மருத்துவமனை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் பலனுள்ளதாக அமையும்.
இந்த மருத்துவமனை அமைப்பதற்கு போதிய நிலம் இல்லாதது தாமதத்திற்கு காரணமாக உள்ளது. ஆகவே அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய நிலம் தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க குழு ஒன்றினை நியமனம் செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
அதற்கு பின் கூடிய விரைவில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்