நாகர்கோவில், ஜூலை – 27,
கன்னியாகுமரியில் நீண்ட நாள் கோரிக்கையில் இருக்கும் விமான நிலையம் மற்றும் பேரிடர் காலங்களில் கை கொடுக்கும் ஹெலிகாப்டர் தளம் ஆகியவை அமைக்க வேண்டுமென மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்
கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இங்குள்ள மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்திலிருந்து தினமும் வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் இல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது. இது மக்களின் அத்தியாவசிய தேவையும் கூட.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் என்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும். அத்துடன் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைவதும் பேரிடர் காலங்களில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க உதவும்.
மறைந்த திரு. வசந்த குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது இதற்க்கான முயற்சிகள் அப்ள மேற்கொண்டு தனியார் நிறுவனங்களின் துணையுடன் விமான நிலையத்திற்கு சாத்திய கூறுகளை ஆராய்ந்து இதற்காக சாமித்தோப்பு பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலம் இதற்காக கண்டறியப்பட்டது. இந்த நிலம் எல்லா விதத்திலும் விமான நிலையம் கட்ட சிறந்த இடம்.
இந்த இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
மேலும் இந்த விமான நிலையத்தை விரைவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இந்த முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பங்களிப்பு மற்றும் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் த
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.