நாகர்கோவில் செப் 17
மிலாடி நபியை முன்னிட்டு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இஸ்லாமிய சொந்தங்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நமது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அன்பு ஈகை சகோதரதத்துவம் ஆகியவற்றை நபிகள் நாயகம் போதித்து மக்களை நல்வழியில் நடத்தினார். அதை பின்பற்றி நாம் வாழ்வதே அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை.இல்லாதவர்களுக்கு இயன்றவரை நாம் உதவிகள் செய்வோம்.
உங்கள் வாழ்விலும் இல்லங்களிலும் இறைவனின் அருள் பெருகி இன்பம் மற்றும் நலன் நிறைய வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள் என அந்த வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.