சங்கரன்கோவில்: ஜுலை:21
சங்கரன்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவில் 11 ஆம் நாளாக தவசு காட்சி யை காண தமிழக மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்த கோடிகள் சங்கரன்கோவிலுக்கு வருகை தந்தனர், எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் பக்தர்களுக்காக சமூக ஆர்வலர்கள் தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கல்யாண மண்டபங்கள் சத்திரங்கள் உள்பட பல்வேறு மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டது முன்னதாக திருக்கோவிலில் சுவாமிகளுக்கு ஆடை அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன மதியம் 1:30 மணி அளவில் தங்கச் சப்ரத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருதல் நிகழ்வு மற்றும் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தவசு காட்சிக்கு புறப்படுதல் நிகழ்வு செரினா சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தவசு காட்சி கொடுத்தல் நிகழ்வு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்படுதல் நிகழ்வு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்வு நடைபெற்று ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சிறப்பு விருந்தினர்களாக ஆடித்தபசு திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் சதீஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் மாவட்ட விளையாட்டு அணிஅமைப்பாளர் வழக்கறிஞர் காசிராஜன் ஜெ கே என்ற ஜெயக்குமார் வீரமணி உள்பட அரசியல் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆடித்தபசு திருவிழாவை சிறப்பித்தனர் ஆடித்தபசுஆலய திருப்பணிகள்சிறப்பு பணிகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி யும்மாவட்ட காவல்துறையினர் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து கோவில்பட்டி ராஜபாளையம் தென்காசி கடையநல்லூர் சுகாதார ஆய்வாளர்கள் ஆரியங்காவு சங்கரன் மகேஸ்வரன் சிவா ஆரம்ப சுகாதார நிலையம் ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் ஆடித்தபசு திருவிழா சிறப்பு பணியில் பணியாற்றின ர் ஆடித்தபசு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி துணை ஆணையர் செயல் அலுவலர் கோமதி அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையா அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முப்பிடாதி ராமகிருஷ்ணன் வெள்ளைச்சாமி முத்துலட்சுமி மற்றும் கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தன ர்.