திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:நவ:09, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சியின் வாயிலாக பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக துவக்க நிகழ்வினை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்க நிகழ்வினை மேற்கொண்டு, இனிப்புகள் வழங்கி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒப்பளிப்பு நிகழ்வு நடைப்பெற்றது. உடன் பொதுப்பணித்துறை செயலாளர் பழனி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.