தேனி ஆகஸ்ட் 21 :
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தேனி மாவட்டம் வீரபாண்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய கட்டடங்களை காணொளி காய்ச்சல் மூலம் திறந்து வைத்தார் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் தேனி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ம. சக்கரவர்த்தி வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி. என். ரிச்சர்ட் ஜெகதீசன் உள்பட பலர் உள்ளனர்.