மயிலாடுதுறை அக் 01
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரிதெற்குவீதியை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் எஸ்.பி.அலுவலகத்தில் அளித்த மனுவிலர் கூறியிருப்பதாவது. சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலுக்குசொந்தமான சிங்காரத்தோப்புத்தெருவில் புலஎண் 418-10ல் 5 ஏக்கர் நிலத்தை எங்கள் குடும்பத்தினர் குத்தகைக்கு வைத்திருந்தோம் அதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கு எங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது அதனை சரிசெய்துகொள்கிறேன் என்று கூறி திருவெண்காட்டை சேர்ந்த செல்வம் என்பர் 5 ஏக்கர் நிலத்தை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதில் மனைபிரிவுகள் அமைக்கப்பதாகவும் அதில் 2400 சதுரடி மனை எங்களுக்கு தருவதாக கூறி மனையை ஒதுக்கீடு செய்தார். அந்த மனையை 1200 சதுரடியாக பிரித்து 2 நபர்களுக்கு எங்கள் குடும்பசூழ்நிலை காரணமாக விற்பனை செய்தோம். கோயில் பகுதிசெலுத்துவதற்கான ரசீதுபோட்டு கேட்டபோது செல்வம் கோயிலுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது அவரிடம் கேளுங்கள் என்று கூறினார்கள். அதில் இருந்து செல்வத்திடம் கேட்டபோது காலம்தாழ்த்திவந்தார். எங்களிடமிருந்து இடத்தை வாங்கியவர்கள் அதில் நகராட்சி அனுமதிபெற்று வீடுகட்டி வசதித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வம் நான் கொடுத்த இடத்தை காலிசெய்யுங்கள் என்று கூறி என்னையும், தற்போது அதில் வசித்து வருபவர்களையும் மிரட்டி வருகிறார் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் சிங்காரத்தோப்பை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகுாரி சட்டநாதர்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட மனைபிரிவில் மனை எண்.50 என்கு ஒப்படைவு செய்து கடந்த 2018ம் ஆண்டு செல்வம் ஒப்புதல் அளித்தார். அதில் வீடுகட்டி குடியேறியுள்ளேன். மேற்படி மனையை தொகை பெற்றுக்கொண்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்று செல்வம் தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.