கோவை ஜூலை: 09
கோவை மாவட்டம் வி ஜி எம் மருத்துவமனை சார்பில்
கல்லீரல் நோய்கள் குறித்த நடைபெற்ற மாநாட்டை
முன்னாள் தேசிய மருத்துவக் கழகத்தின் தலைவர் மற்றும் புது தில்லியின் ஐ எல் பி எஸ் மருத்துவமனையின் தலைவர் ப டாக்டர் சிவகுமார் துவக்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறந்த கல்லீரல் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஜி ஐ தெரபூயுடிக்ஸ் என்ற புத்தகம் டாக்டர்கள் வி ஜி மோகன் பிரசாத் சுமன் வம்சி மூர்த்தி மதுரா மித்ரா ஆகியோரால் உருவாக்கப்பட்டு டாக்டர் சரின் மற்றும் கலிங்கா பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஆசார்யாவால் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் இரைப்பை கல்லீரல் மருத்துவத்துறையினர் இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை விளக்கக் கூடிய புத்தகம் இந்தியாவில் முதலானதாகும்.முதல் 2 நாட்கள் கல்லீரல் மருத்துவர்களுக்கும் 3வது நாள் பொது மருத்துவர்களுக்கு 2024ம் ஆண்டு உலக அளவில் உருவான புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை விளக்குவதாக அமைகிறது. நிகழ்ச்சியில கோகுல் கிருபாஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.