கன்னியாகுமரி நவ 11
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 39-வது ஆண்டு ஆராட்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
இதையொட்டி, வெற்றி வேலுக்கு அலங்கார பூஜை நடந்தது.இரண்டாம் நாள் விழாவான நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெற்றிவேலுக்கு அலங்கார பூஜையும் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடந்தது.
பூஜையினை வளையாபதி ஸ்ரீசுயம்பு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து நடத்தினார்.விழா நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.