மதுரை அக்டோபர் 1,
மதுரை மாவட்டம் அதலை கிராமத்தில் சில்ட்ரன் சாரிடபுள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புயாக மதுரை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், கால்நடை மருத்துவர் சிந்து நிகழ்ச்சியை தலைமை வகித்தார்.
மேலும் கால்நடைகளுக்கு சத்து ஊசி, சினை ஊசி, சினைப் பரிசோதனை மேலும் பால் கரவையை அதிகப்படுத்த சத்து பவுடர் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏறக்குறைய 95 மாடுகள் மற்றும் 104 ஆடுகள் பயன்பெற்றன. நிகழ்ச்சியின் இறுதியாக கால்நடை உதவியாளர் வினோத்குமார் நன்றியுரை வழங்கினார்.