திண்டுக்கல்லில்
தமிழ்த்தேசியக் கட்சியின் சார்பாக மாவீரர்கள் தின விழா வீரவணக்கம் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர்
தமிழ் நேசன் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர் பின்னர் மாவீரர் தின விழா உரையாற்றினார்
மாவீரர் நாள், தமிழர் தேசிய எழுச்சி நாள் (27 நவம்பர் 1982) என்பது தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களை வணங்கும் நாளாகும்.
தமிழீழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்காகவும் நாடு வேண்டி போராடி, தெரிந்தே உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதையும், வணக்கமும் அஞ்சலியும் செலுத்துவது புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.
ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீர்கள் மகத்தானவர்கள்
நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் நமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவு கூஇந்த புனித நாளில்,
எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும்,எத்தகைய சவால்களையும், எதிர்கொண்டு நமது தாயகத்தில் சுதந்திரத்தை வென்றேடுப்போமென இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.
களத்தில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் மட்டும் போராளிகள் அல்ல
எங்கு தமது இனம் அழிக்கப்படுகிறதோ
அதை கண்டு இங்கு எவரேல்லாம் சினம் கொண்டு சீறி எழுகிறார்களோ
அவர்களும் போராளிகளே,
இவர்கள் கண்ட கனவை நனவாக்க, வீழ்ந்து கிடக்கும் நம் மொழி, இனம், சமயம், மண், உரிமை, உடமை மீட்பதற்கு “நாம் தமிழராய்” ஒரே சிந்தனையில் தமிழர் தேசியம் இலக்கினை வென்றெடுப்போம்.
விழ விழ எழுவோம், ஒன்பதாய் முளைவோம், வீழ்ந்தாலும் மடிந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என தமிழ்த்தேசியக் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துவதாக
மாநிலத் தலைவர் தமிழ்நேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
பொதுச் செயலாளர் முல்லைநாதன், பொருளாளர் பாஸ்கரன், துணைப் பொதுச் செயலாளர் பசுமலை முரளி, ஊடகப்பிரிவு செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி தலைவர் சூரியா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் குமார் மாவட்டச் செயலாளர்கள் தங்கையா, ஜோசப் சந்தியாகு,
அஜித்குமார், நிக்கோலஸ், சுரேஷ், மகளிர் அணியினர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்