சங்கரன்கோவிலில் திமுக சார்பில் வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை/
இந்திய சுதந்திரத்துக்காக முதன் முதலாக முதல் குரல் குடுத்த மாமன்னர் பூலித்தேவரின் முதன்மை தளபதியாக விளங்கிய மாவீரர் வெண்ணிகாலடியார் நினைவு தின நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு , யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வெண்ணிகாலடியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள் ,கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன் ,வெள்ளத்துரை, ராமச்சந்திரன், சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் சேது சுப்பிரமணியன் , நகர அவை தலைவர் முப்பிடாதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் ,தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் விஜயபாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், ஜெயக்குமார், பாலாஜி, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.