வேலூர்_06
வேலூர் மாவட்டம் வேலூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் ரஜினி என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் வாகன ஓட்டி ஒருவரை துரத்திச் சென்று அடித்து காயப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது
அந்த வீடியோவில் பதிவிட்டுள்ள நபர் கூறியிருப்பதாவது
வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ரஜினி என்பவர் தன்னை ஒரு மேல் ஆதிக்க சிந்தனையோடு வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்களை விரட்டிச் சென்று நிறுத்துவது தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் எந்த அறிவிப்பும் இல்லாமல் வாகனத்தை பறிமுதல் செய்வது என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்
இது பொது மக்களுக்கு இடையே காவல்துறையின் மீது உள்ள மதிப்பை குறைக்கும் வகையில் செயல்படுகிறார்
இது முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் இந்த நிலையில் வேலூர் லட்சுமி திரையரங்கம் அருகே அஜித் செல்வராஜ் என்பவரை விரட்டிச்சென்று அவரை மடக்கி பிடித்து அவருடைய கையை காயப்படுத்தியுள்ளார் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் தற்பொழுது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பொதுவெளியில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது