நாகர்கோவில் ஜன 28,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட முழுவதும் போலீசார் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 6 டாரஸ் கனரக வாகனங்களை ஓட்டிவந்தவர்கள், மற்றும் ஒரு கார் குடிபோதையில் ஒட்டி வந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இந்த நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.