கன்னியாகுமரி அக் 29
கன்னியாகுமரி தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணண்னை உள்ளிட்ட பொருள்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது . மேலும் களியக்காவிளை பகுதி வழியாக கேரளாவிற்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்துவதாக களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனுக்கு ரகசிய தகவல் வந்த வந்தது. இந்த நிலையில் ஆயவாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை அருகே கோழி விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்கிடமாக ஒரு ஈச்சர் டெம்போ மற்றும் 2 கார்கள் வந்துக்கொண்டிருந்தது அதை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியும் வாகனங்கள் நிறுத்தாமல் சென்று விட்டது. போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தளச்சான்விளை பகுதியில் வைத்து அந்த 2 வாகனங்களையும் மடக்கி பிடித்தனர். மேலும் மலையடி பகுதியில் வைத்து 3 வாகணங்க்ளையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர் மேலும் வாகனங்களை சோதனை செய்து பார்த்த போது ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது,.மேலும் 5 வாகனங்களில் இருந்து சுமார் 22000 கிலோ (22 டன்) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், ரவீந்திரன், ரஜிகுமர், எட்வின் ராஜ், விஜயகுமார், சுரேஷ், சமீர், அனீஷ் ஆகிய 8 பேரை கைது செய்த போலீசார் மேலும் தலைமறைவான ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.