அரியலூர்,ஜூன்;18
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
புனித நீரான கங்கை தீர்த்தம் காவேரி தீர்த்தம் கும்பகோணம் மகாமக குலத்தின் தீர்த்தம் ராமேஸ்வரம் கோட்டி தீர்த்தம் காவேரி கொள்ளிடம் ஆகிய புனித நதிகள் உள்ளிட்ட புனித நீர்களை பூஜை செய்து ஏகாக்னி குண்டங்கள் வளர்ப்பு வேத. சிவக்குமார் சிவாச்சாரிகள் தலைமையில் 5 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் இசைக்க பூஜை நடைபெற்றது
கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து பிரயோகம் கோ பூஜை அனுக்ஜை கலா கர்ஷணம் கனநாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முதல் கால வேள்வி தொடங்கப்பட்டு மகாபூர்ண ஹுதி யாத்ரா தானம் நடைபெற்றது தொடர்ச்சியாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன தொடர்ச்சியாக வேள்வி சாலையில் இருந்து வானவேடிக்கை விண்ணை பிளக்க மங்கல இசையுடன் நாதஸ்வரம் இசைக்க மங்கள பரிவாரங்களுடன் புனித தீர்த்த கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கருட பகவான் வானத்தில் வட்டமடிக்க புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது அப்பொழுது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி பரவச நிலையை அடைந்தனர் பின்னர் புனித தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது விழா குழுவினர் மற்றும் ஊர் நாட்டாண்மைகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர்அருள் ஆசி பெற்று சென்றனர்.