வேலூர்=09
வேலூர் மாவட்டம் ,வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கம் மற்றும் வாணி வித்யாலையா பள்ளிகள்
இணைந்து நடத்திய
வீரமாமுனிவரின்
344-வது பிறந்தநாள் விழா காட்பாடி பாரதிநகர்
வாணி வித்யாலையா பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.வி.செல்வம் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி கட்டுரை, பேச்சு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார் .சுசீ குழுமம் நிர்வாக இயக்குனர் வாணி வித்யாலயா பள்ளிகள் தாளாளர் எஸ். மணிவண்ணன் வீரமாமுனிவர் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் மாநில தலைவர், டார்லிங் குழுமம் தலைவர், வெங்கடசுப்பு வாழ்த்துரையாற்றினார். உடன் வீர மாமுனிவர் தமிழ் சங்க நிர்வாகிகள் பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்