பிப்:5
திருப்பூர்
ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி மேல்நிலைப்பள்ளி 13வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், கலந்து கொண்டார். மாணவர்களுக்கு ஒழுக்கம், கீழ்படிதல், மற்றும் நமது கலாச்சாரம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பள்ளியின் தலைவர் சிவக்குமார் மற்றும் பள்ளியின் தாளாளர் ஓம். சரவணன், திருமதி காயத்ரி ஓம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கார்க்கில் போர் பற்றிய விழிப்புணர்வும், விமானப்படை பற்றி பாடலும் பாடப்பட்டது.
இவ்விழாவானது பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் குரூப் கேப்டன் Dr.ஜி .எஸ்.வொஹ்ரா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜதிந்தர் கவுர் அவர்களும், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆண்டிற்கான அறிக்கை பள்ளியின் முதல்வரால் வாசிக்கப்பட்டது இவ்விழாவில் மாணவர்கள் பல்வேறு கலைத்திறனை வெளிப்படுத்தி வியப்புற செய்தனர். மாணவர்கள் இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு, மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் 1000 க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதி நிகழ்வாக தேசிய கீதத்துடன் ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.