நாகர்கோவில் பிப் 24
ஐயா வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூடிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் என அறநெறியை போதித்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசி 20 ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினம் வருகிறது. பனைத் தொழில் செய்யும் குடும்ப சூழலில் பிறந்த போதும், கல் உண்ணுதலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஐயா வைகுண்டர் அவர்கள். அவரது புகழைப் போற்றும் வகையில், அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.