மயிலாடு துறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது வழவூர் கிராமம். இங்கு யானையை தோலுரித்த அட்ட வீரட்டரங்களில் ஒன்றான இளங்கி லை நாயகி உடனாகிய வீரடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிசேகம் வருகின்ற 4/4/25 அன்று காலை நடை பெற இருக்கிறது. அதனை ஒட்டி இன்று யாகசாலையில் புனித நீர் கடங்கள் வைத்து, வீரடேஸ்வரர் கார்த்திகேயன், இளங்கிலை நாயகி அம்மன் உட்பட இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று பூர்னா குதி நடைபெற்றது.. இந்த இரண்டாம் கால யாக பூஜையில் திருவாவடுதுறை ஆதினம் திருக்கயிலாய பரம்பரை அம்பலவானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். – இந்த யாகசாலை இரண்டாம் கால பூர்னா குதியில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் VGK செந்தில்நாதன், மற்றும் VGK மணிகண்டன், குடும்பத்தினர் உள்ளிட்டஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் திருவருளையும், குரு அருளையும் பெற்று சென்றனர்
வழுவூர் வீரேடஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics