அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பேரணியாக ஆட்டோவில் வந்து அம்பேத்கர் சிலைக்கு துளசி மாலை அணிவித்து பாஜகவினர் மரியாதை செய்தனர். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் பேரணியாக வந்து மாலை அணிவித்தனர். அப்போது அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆதீன நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதேபோல் அரசு வழக்கறிஞர் ராம.சேயோன் தலைமையில் அரசு வழக்கறிஞர்கள் சிவதாஸ், தனிகைபழனி, திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன், முருகமணி, மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.கே.சரவணன், ஸ்டாலின் ஆகியோர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.