தஞ்சாவூர் ஜூலை 8.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் நடைபெற்று வரும் பணிகள் முன்னேற்றம் குறித்தும் ,தர்பார் கூடத்தில் ரூபாய் 6 கோடியே 78 லட்சத்தில் நடை பெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சாம்பாஜி குடியிருப்பு பகுதி ரூபாய் 3 கோடியே 8 லட்சத் தில் நடைபெற்று வரும் புனரமை ப்பு பணியையும்,சார்ஜா மாடியில் ரூபாய் 9 கோடியே 12 லட்சம் மதிப் பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் உதவி பொறியாளர் மணிகண்டன், தொல்லியல் துறை உதவி பொறியாளர்கள் மயில்ராஜ் தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.