நாகர்கோவில் – மார்ச் – 13,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தின் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளாருக்கும் விரிவுபடுத்தி அரசானை வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரா வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முதன்முதலில் அரசாணை எண் 175 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 05.12.2006 -ன் மூலம் சிறப்பு கால முறை ஊதியம் 01.09.2006 முதல் ரூ.1300 – 20 – 1500 – 25-2000 என வழங்கி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது . பின்னர் ஊராட்சி உதவியாளர் நிலை – 2 பணியிடங்களை ரூ. 2500- 5000 + 500 GP உடன் ஊராட்சி உதவியாளர் என அரசாணை என். 91 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 12.08. 2009 -ல் ஆணையிட்டது.
இந் நிலையில் 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ஊதியக்குழு பரிந்துரையின் படி பணி ஒய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு நிதித்துறையின் அரசாணை எண் 314 , நாள் 25.10.2017 -ன் படி சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2000/ ஓய்வூதிய ஒட்டு மொத்த தொகையாக ரூ.1,00,000, / – அறிவித்து ஆணையிடப்பட்டு நாளது வரை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஊராட்சி செயலர்களின் நீண்ட கால கோரிக்கையினை அரசு பரிசீலித்து ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ. 15900- 50400 என்ற தமிழக அரசின் ஊதியக் குழு பரிந்துரையில் உள்ள ஊதிய விகிதத்தில் ஊதி நிர்ணயம் செய்ய அரசாணை எண் – 171 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 30.11. 2018 -ல் ஆணையிடப்பட்டு ஊராட்சி செயலர்கள் ஊதியம் பெற்று வருகின்றனர்.
தமிழக அரசின் ஊதியக்குழு பரிந்துரையின் படியான, முறையான காலமுறை ஊதிய விகிதத்திற்க்கு வரப்பெற்று இதர அரசு பணியர்ள்கள் போல அகவிலைப்படி , மருத்துவப்படி, வீட்டு வாடகைப்படி, பெற்று வரும் நிலையிலும் பணி விகிதத்திலும் அரசு பணியாளர்களுக்கான விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் நிலையில் முறையான காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கான எவ்வித பணி சார்ந்த உரிமையும் மற்றும் சலுகையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்ளுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்து 2-ம் கட்டமாக 04.04.2025 வெள்ளிக்கிழமை சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடும், 3-ம் கட்டமாக 21.04.2025 திங்கள்கிழமை முதல் சென்னை ஊரக வளர்சித் துறை ஆணையரகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் காளியப்பன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகை வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஶ்ரீ குமார், ஒன்றிய தலைவர்கள் பாஸ்கர், சுரேஷ், செராபின் உட்பட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.