சென்னை, ஜூலை- 30, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஏ.சவுந்தரராசன் சி.ஐ.டி.யூ மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன் மாநிலச் செயலாளார்கள், என்.ராசப்பன், கே.கதிரேசபாண்டியன், கே.ராசாங்கம்,, மாநிலப் பொருளாளர் எம்.ஏழுமலை, மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.லூர்துசாமி, கே.சுப்புராஜ், மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பணியாறர்கள் கலந்து கொண்டனர். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்., 2023 – ஆம் -ஆண்டு கண்காணிப்பாளர் பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை செயல் படுத்த வேண்டும்.
ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை குறைந்த பட்சம் ரூ. 9000 /- வழங்கவேண்டும் முதலான கோரிக்கைகள் இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.