தஞ்சாவூர். டிச 11.
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்க
பள்ளியில் நகர திமுக இளைஞர் அணியினர்கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ் நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் திராவிட.கதிரவன்,
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,துணை மேயர்
மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டனர். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, வல்லம் பேரூர் செயலாளர் டி.கே.எஸ்.ஜி.கல்யாண சுந்தரம், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம்,
தஞ்சை மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செந்தமிழ்ச்செல்வன், மற்றும் வல்லம் பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
நிகழ்ச்சியில் வல்லம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் எ.ஞானசேகர் நன்றி கூறினார்