திருப்பூர், டிச.17 > திருப்பூர் வாலிபாளையம் யுனிவர்சல் ரோட்டில் ஸ்ரீ சீரடி சாய் பீடம் எனும் சாய்பாபா கோவில் உள் – ளது. இந்த கோவிலில் புதி தாக துவாரகமாயி துனி, தியான மண்டபம் ஆகி யவை அமைக்கப்பட்டுள் ளது. இதற்கான கும்பாபி – ஷேக விழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல், ஸ்ரீ சாய் மகால் புண்ணியவாசம் – செய்தல் உள்ளிட்ட பூஜைக ளுடன் தொடங்கியது.
யாக பூஜை- பின்னர் 12-ந்தேதி முளைப் – பாரி மற்றும் தீர்த்தக்குட – ஊர்வலம் நடந்தது. இதைத் – தொடர்ந்து 13-ந்தேதி முதல் – கால யாக பூஜை, நேற்று – 2-ம் கால யாக பூஜை. கோபுர கலசம் வைத்தல், திருமேனி பிரதிஷ்டை, 3-ம் கால யாக பூஜையும் நடந் தது. மாலையில் கோவில் தியான மண்டபத்தில் மராட் டிய மாநிலம் சீரடி சாய் பீடத்தின் தலைமை அர்ச்ச கர் திகம்பர் குரு தலைமை யில் சத்ய நாராயண பூஜை நடந்தது.
இந்த பூஜையில் சிறப்பு அழைப்பாளராக கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு. நாகராஜன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர். திலக் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், சிவகாசி தொகுதி அசோகன் எம்.
எல்.ஏ., திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், தொழிலதிபர்கள், ஏற் றுமதியாளர்கள் கழகப் பகுதி செயலாளர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சாய்பா பாவின் திருஉருவ படம், சாய்பாபாவிற்கு அணிவிக் கப்பட்ட ஆடைகள் பிர சாதமாக வழங்கப்பட்டது. மாலையில் கோவில் அருகே டி.வி.புகழ் முத்து சிற்பியின் முத்தமிழ் ராகங்கள் இன் னிசை நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகம் விழாவின் முக்கிய நிகழ் வான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜையுடன் தொடங்கி 6 மணிக்கு கலசங்கள் உலா வருதல் நடந்தது.
பின்னர் அவினாசி காமாட்சி
தாச சுவாமிகள், ஆனைமலை தேவானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் பரிவாரங்கள் மற்றும் கோபுர கல சங்களுக்கு 6.15 மணி முதல் 6.30 மணிக்குள் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.
அன்னதானம்.
தொடர்ந்து 6.45 மணிக்கு அருள் அக்னி(துனி) பிர திஷ்டை பூஜை, 9 மணிக்கு மேல் தச தரிசனம், அலங் கார பூஜை, மகா தீபாரா தனை நடந்தது. 10 மணிக்கு மேல் காமாட்சி தாச சுவா மிகளின் 101-வது ஜெயந்தி யையொட்டி பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள்30,000த்திற்கு மேற்பட்டோருக்கு அனைவருக்கும் காலை 9 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை அன்னதா னம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகள், மலர் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் போல் காட்சியளித்தது. வருகிற 19-ந்தேதி சாய் மகான் பல் லக்கு ஊர்வலம் நடைபெ றுகிறது. விழாவிற்கான ஏற் பாடுகளை ஸ்ரீ சீரடி சாய்பீட அறங்காவலர் குழு, சுப்ரீம் செல்வராஜ், சாய்பாபா தீவிர பக்தர் தம்பு சேவை யாளர்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.