நாகர்கோவில் பிப் 25
நாகர்கோவில் பகுதியில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கினால் சுற்றியுள்ள ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், எனவே உரங்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அகில இந்திய தமிழர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தலைமையில் உயர்மட்டக்குழு நிர்வாகிகளான வழக்கறிஞர் தெய்வ ராஜன், ராமசுவாமி பிள்ளை மற்றும்செய்தி ன் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், குழந்தை சாமி, இப்ராஹிம், ராஜன் போன்றோர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் வலம்புரிவிளை உரக்கிடங்கினால் சுற்று வட்டார குடியிருப்பு மக்களும், தொழில் புரிவோரும் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மூச்சு, சுவாசம் சம்பந்தமான நோய்கள் பரவி வருவதாக அஞ்சி பலரும் குடியிருப்புகளை காலி செய்யும் நிலை உருவாகியுள்ளது.உரக்கிடங்கில் இருந்து மாசு படிந்த காற்று வீசுவதால் அவ்வழியாக மக்கள் பேருந்துகளிலும், வாகனங்களிலும் செல்ல அச்சப் படுகிறார்கள். இந்நிலையில் உரக்கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி வருகின்றன.
எனவே உரக்கிடங்கை சுற்றியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிர் நலனைக் காக்கும் பொருட்டு வலம்புரிவிளை உரங்கிடங்கினை அந்த இடத்தில் இருந்து மாற்றிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.