தென்தாமரைகுளம்., டிச. 26.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ன் 100-வது பிறந்த நாள் விழா அகஸ்தீஸ்வரத்தில் பா.ஜ.க சார்பில் கொண்டாடபட்டது.
இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ராம்தாஸ் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் கோபி, கிருஷ்ண ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா. ஜ. க வர்த்தக பிரிவு தலைவர் செல்வ சுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.