மதுரை மே 23,
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம் மதுரை, தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா காலை 7 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சண்முகர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலிலிருந்து வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பால்குடம் காவடி அழகு குத்துதல் அனைத்து விசேஷங்களுக்கும் சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானை வருடத்தில் ஒருமுறை சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி எழுந்தருளி நவராத்திரி மேடை கொடிமரத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம் காவடி ஆகிய அவசியங்கள் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது
இதற்காக கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 8 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு உற்சவர் சன்னதியில் இருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். மேலும், அங்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றிக்கு வந்து புனிதநீராடி பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் மீனாட்சி அம்மன் கோவில் வழியாக திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி
சென்றனர். மேலும் விசாக விழாவையொட்டி மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பால்குடம் காவடிகளை சுமந்து கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த முருகப்பெருமானுக்கு பாலாபஷேகம் நடந்தது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறக்கும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். வைகாசி விசாகத்தில் முருகனை காண வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து வருகை தந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்தனர். திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்