[5:07 pm, 19/10/2024] +91 90807 28304: நிலக்கோட்டை
அக். 20
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை அருகே, என்.கோவில்பட்டியில் நடிகர் வடிவேலு பாணியில் ஓடையை காணவில்லை என, கிராம மக்கள் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு விடுத்துள்ள நிலையில் கண்மாயில் இறங்கிய கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வகையில்
நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.கோவில்பட்டியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
8 பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய்க்குள் செல்லாண்டி அம்மன் கோவில் மற்றும் கருப்புசாமி கோவிலும் உள்ளது. இக்கோவிலுள்ள கண்மாய்க்கு குளத்துப்பட்டி பாப்பாகுளம் கண்மாய்களில் இருந்து வரும் மழை தண்ணீர் செல்லாண்டி அம்மன் கோவில் கண்மாய் நிரம்பி, சுமார் 20 அடி அகலம் உள்ள ஓடை வழியாக நிலக்கோட்டை கொங்கர் குளத்திற்கு செல்கிறது. கண்மாய் நிரம்புவதால் என்.கோவில்பட்டி, நூத்துலாபுரம் குளத்துப்பட்டி மீனாட்சிபுரம் பெருமாள்பட்டி பங்களாபட்டி வடக்கு விராலிப்பட்டி தெற்கு விராலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த கணாமாய் விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக செல்லாண்டி அம்மன் கண்மாயை, வருவாய்த் துறையில் பணியாற்றும் அரசு அதிகாரி மற்றும் அவரது உறவினர்கள் தண்ணீர் செல்லும் ஓடையை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கடந்த வாரம் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் என்.கோவில்பட்டி கிராம பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நபர்கள் தனக்கு சொந்தமான கண்மாய் எனக்கூறி ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட கிராம பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கிலிபாண்டியன் தலைமையில் 20 அடி ஓடையை காணவில்லை என, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பஞ்சவர்ணம் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் காணாமல் போன ஓடையை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கூறி உள்ளனர்.
இது குறித்து, நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கிலிபாண்டியன் கூறுகையில் செல்லாண்டியம்மன் கோவில் கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லும் ஓடையை காணவில்லை நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அகற்றி ஓடையை கண்டுபிடித்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிலக்கோட்டை பகுதியில் நடிகர் வடிவேல் பாணியில் ஓடையை காணவில்லை எனக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[5:07 pm, 19/10/2024] +91 90807 28304: