மதுரை செப்டம்பர் 30,
மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
ஆசைக்கண்ணன், கார்த்தி, நேரு பாண்டி, மருது பாண்டியன், சிறைச்செல்வம், சாந்தி பாலாஜி மற்றும் காவல் ஆய்வாளர், பொது மக்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 15 அணியை சேர்ந்த மாடுபிடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு தொகையும், வெள்ளிகாசு, அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.