வேலூர்=29
வேலூர் மாவட்டம் ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு காபு அரங்கில் நடைப்பெற்றது. முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி.விஸ்வநாதன் (வேந்தர், வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ) தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். தென்னிந்தியத் திருச்சபை வேலூர் பேராயத்தின் பேராயரும் ஊரிசு கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தலைவர் மற்றும் செயலர் பேரருட்திரு.எச். ஷர்மா நித்தியானந்தன். முன்னிலை வகித்தார். கல்லூரி முதலர்வர் (பொறுப்பு) ஆனி கமலா ப்ளாரன்ஸ் வரவேற்ப்புரையாற்றினார். டாக்டர் பி. அன்பழகன், துணை முதல்வர் (காலை) டாக்டர் டி. சத்தியபிரசாத் குமார், துணை முதல்வர் (மாலை) மற்றும் டாக்டர் சி..காலேப் நோயின் சத்தர், நிதியாளுநர் டாக்டர் டி.டேனியல் எழிலரசு, முன்னாள் முதல்வர். மற்றும் டாக்டர் எம்.ஜோப் கோடிநாத், முன்னாள் மணவர் பேரவை அலுவலர் .இனைந்து அனைவரையும் வரவேற்றனர். மோ. எ. ரசல் பிரேம்ராஜ் பெஞ்சமின், சிறப்பு அலுவலர், அனைத்து நிகழ்வையும் ஒருங்கினைத்திருந்தார். இச்சிறப்பு நிகழ்வில் பல துறைகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.