சென்னை, நவ – 30, சென்னை பெருநகர மேம்பாட்டு வாரியத்தின் கீழ், தாம்பரத்திலிருந்து 3, 4 கி.மீ. தொலைவில் உள்ள வரதராஜபுரம் மற்றும் எருமையூர் என்ற இரு கிராமங்களில்
வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இப்பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
அடையாறு ஆற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள், குறிப்பாக ராயப்பாநகர் என்ற பகுதி இந்த பருவமழைக் காலத்தின் போது மழைவெள்ள நீரால் சூழப்பட்டு தத்தளிக்கிறது.
இதற்கு காரணமாக மழை நீர் மற்றும் வெள்ள நீர் இயற்கையான முறையில் வடிந்து அடையாறு ஆற்றுக்குள் செல்வதை தடை செய்வதாக வெளிவட்டச்சாலை இருக்கிறது.
கிஷ்கிந்தா – தாம்பரம் சாலை நெடுகிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததால் முறையான வெளியேறும் வழி இல்லாமல் மழை நீரானது, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பல நாட்களுக்கு நீர் வடியாமல், வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இப்பிரச்சனையை மேலும் மோசமாக்கும் வகையில், வரதராஜபுரம் மற்றும் எருமையூரின் பூர்வீக குடியிருப்பு பகுதிகளையொட்டி தாழ்வான பகுதிகளில் புதிதாக 96 ஏக்கர்கள் நிலப்பரப்பில் ஒரு குடியிருப்பு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு வருகிறது. தரைமட்டத்தை 7 முதல் 12 அடிவரை உயர்த்தும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் மண் இப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது,
இதன் காரணமாக, மேடான பகுதிகள் கூட இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்படுபவையாக மாற்றப்பட்டிருக்கின்றன.
உள்ளூர் சமூகங்கள் மீது பாதிப்பு
ஒழுங்கு முறைப்படுத்தாத இந்த நில மேம்பாடு திட்டம், பேராபத்தான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் சாலை, பஜனை கோவில் தெரு, அம்பேத்கார் சாலை, முனுசாமி சாலை, ஜைடிகோ லே அவுட், ஓம் சக்தி நகர் ஆகியவை உட்பட, பல முக்கியமான குடியிருப்புபகுதிகள், கடுமையான வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் ஆபத்தில் இப்போது இருக்கின்றன.
ஆகவே எங்கள் கோரிக்கையானது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க கான்கிரீட் சுவர்கள் கட்ட வேண்டும்.
மழை மற்றும் வெள்ள நீர் தடையின்றி ஓடுவதற்கு கீழ் போதுமான மதகுகளை / சிறுபாலங்களை அமைத்திய வேண்டும் .
பொதுப்பணித் துறை
கிஷ்கிந்தா-தாம்பரம் சாலையில் மழைநீர் கால்வாய்களை உருவாக்கி, அடையாறு ஆற்றுக்குள் பாதுகாப்பாக தண்ணீர் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக இருந்து வரும் பூர்வீக குடியிருப்புகளை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க புதிதாக உருவாக்கப்படுகின்ற மனைப்பிரிவில் புதைந்துபோன இயற்கையான நீர் வழித்தடங்களை மீண்டும் திறந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் வேண்டும் கிராம மக்கள் தெரிவித்தனர்.