கன்னியாகுமாரி ஜீலை 20
குமரிமாவட்டம் அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கத்தில் 2024 முதல் 2027 வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் எமிலி அப்பாத்துரை தலைமை தாங்கினார். பூல் பாண்டியன் முன்னிலை வகித்தார். புதிய தலைவராக ஹிட்லர், செயலாளராக எஸ்.பி.பாலமுருகன், பொருளாராக சுதன் ஆகியோர் இரண்டாவது முறையாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களிடம் பூல் பாண்டியன் சங்க பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்களாக கவுன்சிலர் ஜோஸ்திவாகர், பொறியாளர் முத்துக்குமார், ஜெயக்கொடி, ராமகிருஷ்ணன், பால்ராஜ், எட்வின் தம்பிராஜ், உஷா, செல்வராஜ், முருகேசன், தங்கத்துரை, கணபதி, பிரிண்ஸ், செல்வக்குமார், வரதராஜன், காளிதாசன் தினேஷ், பிரதீஷ், நரேஷ் மேலும், இளைஞரணி தலைவராக ஹென்டர்சன் சகாவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஜவஹர் ஸ்டோர் உரிமையாளருமான எஸ்.ஜெஸீம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இதில் கவுன்சிலர்கள் ஜோஸ்திவாகர், ஜெயந்தி நாராயணன், மீனா ஜோதி, அய்யாசிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.