கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி கீழக்கரை,ஆக.5-
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையம் அறிமுக விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்துகொண்டு ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்,ஐ.ஆர்.எஸ்,ஐ.எப்.எஸ் போன்ற கல்விகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் வரவேற்றார். சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உறுப்பினர் பி.எஸ்.ஏ.அஷ்ரப் புஹாரி சிறப்புரை ஆற்றினார். இளங்கோவன் மற்றும் சென்னை நியூ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் கமால் நசீர் ஆகியோர் பாடத்திட்டம் குறித்து விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் இவ்விழாவில் கீழக்கரை தெற்கு தெரு ஜமாஅத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம், கவுன்சிலர் முகமது காசிம், டாக்டர் ஜவாஹிர் ஹுசைன், முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மவுலா முகைதீன் மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளி, முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி, உள்பட கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளி9,10,11,12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகள்,பள்ளி தாளாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.