நாகர்கோவில் , ஜூலை 27,
சுங்கான் கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரியின் தாளாளர் அருட்ப்பணியாளர். காட்வின் செல்வ ஜஸ்டஸ் கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் நிதிக்காப்பாளர் அருட்பணியாளர் சேவியர் ராஜ் , ஆராய்ச்சி துறை பேராசிரியர் மார்சலின் பெனோ ஆகியோர் நிருபர்களுடன் கூறியதாவது . எங்களது கல்லூரி குமரி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டாக வெள்ளி விழாவை கடந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது தற்பொழுது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எங்களது கல்லூரிக்கு ஆராய்ச்சித்துறை கல்வி நிறுவனம் ரிசர்ச் இன்ஸ்டியூட் என்ற தனிச்சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற தனிச்சிறப்பு பெற்ற தமிழகத்தின் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியும் இணைந்துள்ளது மேலும் தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் ஆராய்ச்சி துறை நிறுவனம் என்ற சிறப்பை கல்லூரி பெற்றுள்ளது இக்கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும் ஆறு இளநிலை பொறியியல் துறைகள் தேசியத் தர கட்டுப்பாட்டு வாரியத்தின் என்பிஏ இந்திய தர சான்றிதழ் பெற்றுள்ளது கல்லூரியில் பணிபுரியும் 35 பேராசிரியர் ஆராய்ச்சி வழிகாட்டிகளாக உள்ளனர். இக்கல்லூரியில் 200 – க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பயில்கின்றனர் . மேலும் இந்த கல்லூரியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மத்திய மாநில அரசுகள்யிடமிருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆராய்ச்சி நிதி பெறப்பட்டுள்ளது இத்தகைய சிறப்புகளை கல்லூரி பெற்றுள்ளதால் இந்த ஆண்டு முதல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது.