தென்காசி மாவட்டம் காங்கிரஸ் பிரமுகரால் தாக்கப்பட்ட செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல் – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வணிகர் சங்கபேரவையினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை மைந்தன் ஷெரீப் தலைமையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் ;
தென்காசி மாவட்டம் சுரண்டை ஆலடிப்பட்டி விலக்கு பகுதியில் சதீஸ்வரன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ஆம் தேதி காலை சதீஸ்வரனின் தம்பி காலையில் கடையை திறந்து சுத்தப்படுத்தும் போது அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்த நபர்கள் மீது தூசி பட்டதாகவும் அப்போது ஆத்திரமடைந்த நபர்கள் கடையினுள் புகுந்து சதீஷ்வரனின் தம்பிகளான அஜித் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் சரமாரி தாக்குதல் நடத்திய தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையில் நLந்த தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த சுரண்டை காவல் துறையினர் கடையில் புகுந்து அடித்தவர்களில் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீதி உள்ள நபர்கள் காங்கிரஸ் பிரமுகரை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியும் எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பினர் தாக்குதல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை தாமதிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.