நாகர்கோவில் அக் 25
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படாமல் அப்படியே விட்ட பெட்ரோல் பங்க் இன் எரிபொருள் சேமிப்புத் தொட்டியை உடனடியாக அகற்றி பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேப்பமூடு ஜங்சனில் 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வந்த பெட்ரோல் பல்க் 25.07.2017 ல் மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்துவிட்டு அங்கு இருந்த எரிபொருள் சேமிக்கும் தொட்டியை அகற்றாமல் அதன் மீது நெடுஞ்சாலை துறையால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான் இது குறித்து 17-02-2022 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டதற்கு முழுமையான தகவல் வழங்காமல் ஒரு சிலவற்றை தவிர்த்து தகவல் வழங்கினார்கள்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இப் பகுதியில் பெட்ரோல் டேங் இருந்தது உண்மை என்பது, அந்த பெட்ரோல் டேங்கை அதன் உரிமையாளரும் எடுத்து செல்லவில்லை மாநகராட்சியும் அகற்றப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
தகவல் ஆணையம் உத்தரவிட்டு தகவல் தந்து ஓராண்டாகியும் டேங்கை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் 19-06-2024 அன்று தற்போதைய மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தேன். அவரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
பெட்ரோல் பல்க் இருந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக அண்ணா பேருந்து நிலையத்தை நோக்கி அனைத்து பயணிகள் பேருந்துக்களும் கனரக வாகனங்களும் அந்த பெட்ரோல் டேங் மீது பயணிப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் அந்த பகுதி பொத்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல் அங்கு சாலை அமைக்கும் போது அந்த பெட்ரோல் டேங்கில் எரிபொருளும் இருந்ததாக கூறுகிறார்கள். அவ்வாறு எரிபொருளோடு டேங் மீது சாலை அமைத்திருந்தால் வெடி குண்டை போல் பெரும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி வியபார நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் உடனடியாக மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்து அந்த பெட்ரோல் டேங்கை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன் டேங்கை அப்புறப்படுத்தாமல் அதன் மீது சாலை அமைக்க உடந்தையாக இருந்து பெரும் விபத்து ஏற்படுத்த காரணமாக இருக்கும் சம்மந்தப்பட்ட அன்றைய மாநகராட்சி ஆணையர் உட்பட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.