அரியலூர், ஜூன்:19
அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள். தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் மகளிர் தங்கும் விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கான விடுதிகள் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள் பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள், நடத்தும் நிறுவனங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014-ன்படி பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் https://tnswp.com என்ற இணையதளம் வழியாக, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (தரைத்தளம் அறை எண்:20)-ஐ அணுகி விபரங்களை அறிந்துகொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.