திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா அலுவலக மூலம் மேர
யுவ பாரதத்துடன் தீபாவளி என்ற தலைப்பில் திண்டுக்கல் நேரு யுவ கேந்திரா மற்றும் காந்திகிராம பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகம் சேர்ந்து உழவர் சந்தை, பேருந்து நிலையம், பொது இடங்கள் மற்றும் கடைவீதிகள் போன்ற பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டன.மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவிகள் செய்தும், மருத்துவமனையில் நடைபெறக்கூடிய சேவைகள் பற்றியும் தன்னார்வலர்கள் அறிந்து கொண்டனர். காவல்துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நேரு யுவகேந்திரா அலுவலக மாவட்ட இளையோர் அலுவலர் சரண் வி கோபால் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தன்னார்வலர்களும் ,மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.