சென்னை, நவ -21,
கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தின்
24வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கர்நாடக மாநில குடிநீர் வழங்கல் கழிவு நீரகற்று வாரிய தலைவர் டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக துணைவேந்தர் க.ந.செல்வகுமார், பல்கலைதுறை பேராசியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இப்பல்கலைக்கழகத்தின் இப்பட்டமளிப்பு விழாவில் 262 மாணவிகள், 326 மாணவர்கள் என மொத்தமாக 588 மாணவர்களுக்கு பட்டங்கள், பட்டயங்கள் அளிக்கப்பட்டது . மேலும் 24 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் என மொத்தம் 44 மாணவ மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றனர். 40 முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் நிறைஞர் (எம்.வி.எஸ்.சி ) பட்டங்களும் , 12 முதுநிலை உணவு தொழில்நுட்பப் பிரிவில் நிறைஞர்
( எம்.டெக் ) பட்டங்களும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.
இளநிலை பட்டப்படிப்புகளுள் , கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு ( பி.வி.எஸ்.சி, & ஏ.எச். ) பட்டங்கள் 371 மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது .
இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில்
( பி.டெக் ) 32 பேர் உணவுத் தொழில்நுட்பப் பிரிவிலும் , 21 பேர் கோழியினத் தொழில்நுட்ப பிரிவிலும் , 16 பேர் பால்வளத் தொழில்நுட்பப் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளனர் . மேலும் , இவ்விழாவில் 47 மாணவ மாணவியருக்கு முதுநிலை பட்டயங்கள் வழங்கப்பட்டது.
மருத்துவ பட்டப்படிப்புகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு 127 விருதுகள் வழங்கப்பட்டது. இது தவிர , 6 விருதுகள் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் , மாணவர் நலனுக்காக இப்பல்கலைக்கழகத்தில் புதிய நன்கொடை விருது ஒன்றும் இவ்வாண்டு முதல் நிறுவப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.