பரமக்குடி,அக்.4: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரமக்குடியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், ராஜாராம் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில்
ஒற்றுமை இயக்க நடைபயண பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து துவங்கி சந்தை கடை, பஸ் நிலையம், ஆர்ச் வழியாக காந்தி சிலை முன்பு வந்து முடிவடைந்தது.இதனை தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யப்பட்டது.இந் நிகழ்ச்சியில், மாநில சேவா தல அப்துல்அஜிஸ் வரவேற்றார். இதில் மாநில நிர்வாகிகள் ஆலம்,கோதண்டராமன், ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி ராமலெட்சுமி, வட்டார தலைவர்கள் கணேசன் வேலுச்சாமி, ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.